சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி
ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில்
ஈடுபட்டுகின்றனர்.
வங்கி ஊழியர்களுக்கு ஏற்கெனவே போடப்பட்ட ஊதிய ஒப்பந்தம் 2012 அக்டோபரில்
முடிந்துவிட்டது. அதன்பிறகு புதிய ஊதிய ஒப்பந்தம் போடவில்லை. எனவே, புதிய
ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் போட வேண்டும். சீர்திருத்தம் என்ற பெயரில்
வங்கிகளை தனியார்மயமாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

வேலைநிறுத்தத்தில் 25 பொதுத்துறை வங்கிகள், 12 தனியார் துறை வங்கிகள், 6
அயல்நாட்டு வங்கிகள், 40 கிராமிய வங்கிகளின் ஊழியர் களும் பங்கேற்கின்றனர்.
நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க
வுள்ளனர்.
No comments:
Post a Comment